பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை, மீளப்பெறப்பட்டுள்ளது.
ஞானசார சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் இன்று(22) குறித்த மனு மீளப்பெறப்பட்டுள்ளது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இந்த மனு பரிசீலிக்கப்பட்ட போது சட்டத்தரணி அந்த மனுவை மீளப் பெறுவதற்கு அனுமதி கோரியுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி ஞானசார தேரர் இந்த மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.