கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் இரு சகோதரர்கள், இருவரின் நடத்தையும் ஒரே மாதிரியாக இருக்கின்றதாக தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சிவாஜிலிங்கம் இனரீதியான கருத்துக்களை முன்வைத்து பிறிதோர் அரசியலினை முன்னெடுத்து வருகிறார். அவ்வாறே தெற்கில் கலகொட அத்தே ஞானசார தேரர் இனவாத கருத்துக்களை முன்வைத்து மற்றுமோர் அரசியல் நாடகத்தினை முன்னெடுத்து செல்கிறார் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஆதலால், குறித்த இரு சகோதரர்களையும் மக்கள் ஒரே விதமாக நோக்க வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.