(FASTNEWS|COLOMBO) பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் அவரது தாயாரும் நேற்றிரவு(23) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன் ஜனாதிபதி சுமூகமாக கலந்துரையாடினார்.