ஞாயிறன்று விஷேட ஆராதனைகள்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மண்ட் திலகரத்ன அடிகளார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஞாயிறு காலை 7.30 மணிக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் குறித்த இந்த ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.