ஞாயிறு களனிவெலி புகையிரத பாதையுடனான புகையிரத சேவைகள் இரத்து..

களனிவெலி புகையிரத பாதையின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் ஞாயிறு(13) அந்த பாதையுடனான புகையிரத சேவைகள் இடம்பெறாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் அன்றைய தினம் களனிவெலி வீதியின் மஹரகம முதல் கொஸ்கம புகையிரத நிலையம் வரை இடம்பெறும் ரயில் பஸ் சேவை வழமை போல் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை(14) முதல் மீண்டும் களனிவெலி பாதையுடனான புகையிரத சேவைகள் வழமை போல இடம்பெறும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

(rizmira)