(FASTNEWS | COLOMBO) – ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக, டயகம செல்லும் பிரதான வீதியில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான வீதி தாழிறங்கியுள்ளது. எனவே, குறித்த பகுதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சில இடங்களில் மண் திட்டுகள் சரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் இதனால், பொது மக்களை அவதானமாகச் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
தாழிறக்கம் ஏற்பட்ட பகுதியை சீரமைப்பதற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையினூடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.