ஹற்றனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில்,
முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியும் இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஹற்றன்ன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்








