டிசம்பர் 1ம் திகதி நள்ளிரவு முதல் தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பில்..

தண்டப்பணம் 25,000 ரூபாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் டிசம்பர் 1ம் திகதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து மாகாணங்களுக்குமான தனியார் உரிமையாளர் பஸ் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த தண்டப்பணம் குறித்து டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தமது சங்கம் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும், ஆலோசனையில் தீர்வு கிடைக்காதவிடத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அதன் செயலாளர் சரத் விஜிதகுமார் இன்று(24) தெரிவித்துள்ளார்.