இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விஜய்யின் ‘சர்கார்’, இயக்குநர் மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’, அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படம் என பிஸியாக இயங்கி வருகிறார்.
இது தவிர பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஆல்பங்களிலும் கவனம் செலுத்தி தீவிரமாக இயங்கி வருகிறார்.
மேலும் அவருடைய கதை – தயாரிப்பில் உருவாகும் ’99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் மற்றும் ராப் பாடகர், பாடலாசிரியரான வில் ஸ்மித்தை சந்தித்திருக்கிறார் ரஹ்மான்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது மனதுக்கு நெருக்கமான விஷயம் குறித்து வில் ஸ்மித்துடன் பேசியதாகக் கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், டிசம்பர் மாதம் இசைக் கச்சேரி என்று ஒரு குறிப்பும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வில் ஸ்மித்தும் இணைகிறாரா, ரஹ்மான் இசையில் பாடுகிறாரா? என்ன நடக்கப் போகிறது என ரசிகர்களிடம் பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

