ஹிருணிகாக்கு சொந்தமான டிபெண்டர் ரக வாகனத்தில் வந்து 34 வயதான ஒருவரை தெமட்டகொடை பகுதியில் வைத்து கடத்தி, விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆறு பேர் கொண்ட குழுவினரே, நேற்று திங்கட்கிழமை வந்து, அவ்விளைஞனை கடத்திசென்று, கடுமையாக தாக்கி, இடையில் கைவிட்டுவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த டிபெண்டர் தன்னுடையது என்றும் அதனை, பொலிஸில் இன்றையதினம் ஒப்படைக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் அறுவரும் பொலிஸில் இன்று சரணடையவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். அவ்வாறு சரணடையாவிடின் அந்த ஆறுபேரையும் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சந்தேகநபர்கள், அறுவரும் நேற்றையதினமே பொலிஸில் ஆஜராகவிருந்ததாக அறிவித்திருந்தனர் எனினும், அவர்கள் நேற்றையதினம் ஆஜராகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த டிபெண்டர் ரக வாகனம், நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரனுடையது என்றாலும், இந்த சம்பவத்துக்கும் அவருக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தென்படுகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.