டிரம்பின் இணைய பாதுகாப்பு குழுவில் எழுவர் இராஜினாமா..

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு இணைய பாதுகாப்பு விவகாரங்களில் ஆலோசனை அளித்து வந்த குழுவைச் சேர்ந்த 7 பேரும் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

7 பேரும் கூட்டாக எழுதியுள்ள இராஜினாமா கடிதத்தில், தேச பாதுகாப்பு விவகாரங்களில் டொனால்டு டிரம்ப் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இணைய பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்து போதிய அக்கறை செலுத்தவில்லை என்றும், இனவெறி குழுக்களின் வன்முறையை கண்டிக்கவில்லை என்றும் டிரம்ப் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)