அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகள் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு உள்ளூர் நேரப்படி நேற்று(12) காலை ஒரு கடிதம் வந்துள்ளது. குறித்த கடிதத்தை அவரது மனைவி வனிசா திறந்து பார்த்துள்ளார். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் வெள்ளை பவுடர் இருந்துள்ளது.
விஷத்தன்மை இருக்கலாம் என சந்தேகித்த அவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
கடிதம் வந்தபோது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
என்றாலும் பவுடரை ஆய்வுக்குற்படுத்திய அந்நாட்டு பொலிஸார் விஷத்தன்மை எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், ஜூனியர் டிரம்பின் மனைவிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜூனியர் டிரம்புக்கு பாதுகாப்பு அளித்து வரும் இரகசிய பாதுகப்பு சேவை அமைப்பினர், வெள்ளை பவுடர் குறித்து விசாரணை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#g-rishma