அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் உரையின் போது தூங்கி கொண்டிருந்த “ஜோசுவா டிரம்ப்”க்கு இணையதளத்தில் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.
அமெரிக்க பள்ளி ஒன்றில் 11 வயதுடைய ஜோசுவா டிரம்ப் என்ற சிறுவன் படித்து வருகிறான்.
அமெரிக்க அதிபரின் பெயர் இந்த சிறுவனுக்கும் சூட்டப்பட்டு இருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான்.
இந்த சிறுவன் பிரச்சினை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்துக்கும் இது வந்தது.
அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அமெரிக்க கூட்டு பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிபர் தரப்பில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களை பாராளுமன்றத்துக்கு வரவழைக்கலாம். அதன்படி அதிபர் டிரம்ப் தனது மனைவி உட்பட 13 பேரை அழைத்திருந்தார்.
அதில், சிறுவன் ஜோசுவா டிரம்பும் அழைக்கப்பட்டிருந்தாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக மாணவர்கள் கேலி- கிண்டலால் பாதிக்கப்பட்டு இருந்த அவனை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சிறுவனை டிரம்ப் அழைத்திருந்தார்.
பாராளுமன்றத்தில் டிரம்ப் உரை நிகழ்த்தி கொண்டிருந்த வேளை அந்த சிறுவன் அதை கண்டுகொள்ளாமல் தனது இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்.
அந்த புகைபடத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பரவ விட்டு இது சம்பந்தமாக விமர்சனமும் செய்து இருக்கிறார்கள்.
மேலும் டிரம்ப் உரையின் போது தூங்கியதற்கான அந்த சிறுவனுக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இந்த விடயம் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது.
