அமெரிக்காவில் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கான பொது மன்னிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கு டிரம்ப் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒபாமா அரசின் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை தற்போதைய டிரம்ப் அரசு இரத்து செய்து வருகின்ற நிலையில், தற்போது சிறுவயதில் உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் குடியேறிய 8 லட்சம் பேருக்கு ‘டி.ஏ.சி.ஏ.’ என்று அழைக்கப்படுகின்ற பொது மன்னிப்பை இரத்து செய்திருக்கிறது.
இது தொடர்பாக கடந்த 5 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், 6 மாதங்களில் இது முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார். அதற்குள் இந்த திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு பாராளுமன்றம் சட்டப்பூர்வ தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக நியூயார்க், மசாசூசெட்ஸ், வாஷிங்டன், கனெக்டிகட், டெலாவரே, ஹவாய், இல்லினாய்ஸ், இயோவா, நியூ மெக்சிகோ, வடக்கு கரோலினா, ஒரேகான், பென்சில்வேனியா, ரோட் தீவு, வெர்மாண்ட், வெர்ஜீனியா ஆகிய 15 மாகாணங்களும், கொலம்பியா மாவட்டமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.