டிராக்டர் கவிழ்ந்ததில் மத்தல விமான நிலையத்தில் விபத்து

டிராக்டர் கவிழ்ந்ததில் மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப்பணி ஊழியர்கள் அறுவர், இன்று  புதன்கிழமை(23) காலை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுமான நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான சீமெந்து ஏற்றி வந்த டிராக்டரே இவ்வாறு கவிழ்ந்ததாகவும் இதில் காயமடைந்த ஆறு ஊழியர்களும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(riz)