டிரான் அலசின் மனு குறித்து சட்டமா அதிபருக்கு அறிவித்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தாக்கல் செய்த மீள் மனு தொடர்பில் கொழும்பு மேல்நீதிமன்றம் சட்டமா அதிபர் உட்பட்டவர்களுக்கு அறிவித்தலை அனுப்பியுள்ளது.

தமது கடவுச்சீட்டை திருப்பித்தர கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று கோரியே அலஸ் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமது கடவுச்சீட்டை 6 வாரங்களுக்குள் திருப்பித்தர கோரியிருந்த போதும் கோட்டை நீதிவான், அலஸ் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய நிதிக் குற்றச்சாட்டை கருத்திற்கொண்டு அதனை நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் நீதிவேண்டி அவர் மேல்நீதிமன்றம் சென்றுள்ளார்.

2005 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு பணத்தை வழங்கிய குற்றச்சாட்டு அலஸ் மீது சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.