டிரான் அலஸை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கைது செய்ய முடியாது

நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கைது செய்யவேண்டாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது , டிரான் அலஸ் எம்.பி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு உட்படுத்திய போதே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

அவரை கைது செய்யாமல் இருப்பதற்கான சட்டமா அதிபர் ஏற்றுக்கொண்டார், அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பிலான முன்னேற்றத்தை உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கொண்டுவருமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.