டிரான் அலஸை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடைப்பிறப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விரைவில் கைது செய்யத் தடை விதித்து சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர் விரைவில் கைது செய்யும் அளவுக்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என உயர் நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.

டிரான் அலஸ் மீதான விசாரணைகள் நிறைவுபெறும் வரை அவரை கைது செய்யக் கூடாதென உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு பணித்துள்ளது.

தன்னை கைது செய்வதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கும்படி டிரான் அலஸ் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடுகள் அமைக்கவென உருவாக்கப்பட்ட ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் டிரான் அலஸ் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பானது.

(riz)