திலகரத்ன டில்ஷானின் ஓய்வினை தொடர்ந்து டில்ஷானின் மனைவி மஞ்ஜுலா திலினி மீண்டும் சின்னத்திரைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரையின் நடிப்பிற்கான மஞ்ஜுலாவிற்கு அழைப்புக்கள் கிடைத்தவண்ணம் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மஞ்ஜுலா கூறுகையில்; “அழைப்புக்கள் என்றால் கிடைக்கின்றன. ஆனால், நடிப்பிற்கான அழைப்பினை நான் ஏற்கவில்லை. ஏனெனில் அண்மையில் நாம் வியாபாரமொன்றினை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். அத்துடன் வேலைப்பளு அதிகம். நான் தொடர்ந்தும் வியாபாரத்துடன் கைகோர்க்க எண்ணியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“நான் நடிக்கும் காலங்களில் சிறந்த அர்த்தமுள்ள நாடகங்களுக்கு பங்கேற்றேன். அந்த நாடகங்கள் குறித்து இன்றும் மக்கள் கதைக்கின்றனர். இன்றும் எனக்கு அழைப்பிதழ்கள் கிடைக்கின்றன. ஆனால் பங்கேற்காது அவர்களை அசௌகரியத்திற்கு ஆளாக்க நான் விரும்பவில்லை. உண்மையில் வீட்டு வேலைகளுடன் எனக்கு நடிக்க நேரமுமில்லை.” என மேலும் தெரிவித்தார்.
“தனிமையான வாழ்க்கையினை விட குடும்பத் தலைவியானால் வேலைப்பளு அதிகம். இக்காலங்களுக்கு பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை அத்துடன் தில்ஷானும் ஓய்வில் இருக்கிறார். ஆதலால் மூன்று பிள்ளைகளுடனும் நாம் சுற்றுலா செல்ல எண்ணியிருக்கின்றோம்” எனவும் மஞ்ஜுலா மேலும் தெரிவித்தார்.