திலகரத்ன டில்ஷான் கருத்துக்களை வெளியிடுவதும் வெளியிடாமலிருப்பதும் அவருடைய விருப்பம். அதில் அமைச்சரான நான் தலையிட முடியாது. அதனால் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் நான் கவனம் செலுத்துவேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு வீரகேசரி விளையாட்டுப் பிரிவுக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டியின்போது, டில்ஷான் தனக்கு நேர்ந்த அவலங்களை வெளியிடப்போகிறாராமே என்று அவரிடம் கேட்டதற்கு,
கிரிக்கெட் அணிக்குள் நிறைய பிரச்சினைகள் இருக்கிறன. கிரிக்கெட்டில் மட்டுமல்ல எதுவாக இருந்தாலும் அது அணியாக இருந்தால் அதற்குள் ஏதாவது சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும். அந்தப் பிரச்சினைகளை அப்போது அவர்களால் வெளியில் சொல்ல முடியாது.
தற்போது அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் வெளியில் சொல்ல முனையலாம். அது அவருடைய விருப்பம். அதில் நான் ஒன்றும் செய்ய முடியாது. தனிப்பட்ட பிரச்சினைகளில் அமைச்சரான நான் தலையிட முடியாது. தலையிடவும் மாட்டேன். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் எனக்கில்லை. டில்ஷானும் சரி சனத் ஜயசூரியவும் சரி யாராக இருந்தாலும் எனக்கு ஒன்றுதான் என்று அமைச்சர் பதலளித்தார்.