யாழ் – பூங்குடி தீவில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் டி.என்.ஏ. பரிசோதனைக்காக காத்திருப்பதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வடமாகாண பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
காவற்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
இந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரிடமும், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டீ.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில், இதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.