முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கட்டளைத் தளபதி டி.கே.பி.தசநாயக்கவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இன்று(09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
(rizmira)