பாகிஸ்தான் அணியில் அதிரடி வீரராக களம் இறங்கியவர் ஷாகித் அப்ரிடி. இளம் வயதிலேயே பாகிஸ்தான் அணியில் கால் பதித்த இவர், இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 37 பந்தில் சதமடித்து சாதனை படைத்தார். தற்போது ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டியில் இருந்த ஓய்வு பெற்று பாகிஸ்தான் டி20 அணிக்கு மட்டும் கெப்டன் பொறுப்பில் இருந்து வருகிறார்.
சமீப காலமாக பாகிஸ்தான் அணி டி20 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அப்ரிடியின் ஆட்டம் கவலையளிக்கும் வகையில உள்ளது. இதனாலும், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடவும் கராச்சியில் இருந்து லாகூருக்கு மாறியுள்ளார். அங்கு இவர் தன்னை தயார் படுத்தும் வகையில் தீவிர பயிற்சியில் ஈடுபடப்போகிறார்.
அப்ரிடி சிறுவயது முதலே காராச்சியில் வாழ்ந்து வருகிறார். உள்ளூர் போட்டிகளில் கராச்சி அணிக்காகவே விளையாடி வருகிறார். அவரது குடும்பமும் கராச்சியில்தான் தொழில் செய்து வருகிறது. இந்நிலையில் தனது குடும்பத்துடன் லாகூர் சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அணியை டி20 உலகக்கோப்பைக்கு சிறப்பாக தயார் படுத்த இந்த மாற்றம். லாகூரில் முறைப்படியாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுக்க முடியும். எந்தவித கவனச்சிதறல் இன்றி முழு கவனத்தையும் கிரிக்கெட் மீது செலுத்த முடியும்’’ என்று அப்ரிடி மேலும் குறிப்பிட்டார்.
(riz)