டி20 உலகக்கிண்ணத் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் ரஹானே இடம்பெறுவது கடினம் என்று டோனி சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணத் தொடர் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது.
இந்தத் தொடருக்கு இன்னும் 21 நாட்கள் இருக்கும் நிலையில், 11 பேர் கொண்ட இந்திய அணியில் ரஹானே இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது என்று இந்திய அணித்தலைவர் டோனி சூசகமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரைசிங் புனே சூப்பர்ஜியண்ட்ஸ் அணியின் உடை அறிமுக விழாவில் கலந்து கொண்ட டோனி கூறுகையில், “ரஹானே மிகவும் சீரான முறையில் ஆடி வருகிறார்.
ஆனால் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 11 வீரர்கள் குழுவில் எப்போதும் இடம்பெறுவதில்லை. இதற்கு காரணம் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் நன்றாக ஆடி வருகின்றனர்.
ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் 2வது அல்லது 3வது வரிசையில் சிறப்பாக ஆடும் வீரர். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவதை வைத்து சிலர் பேசலாம்” என்று கூறியுள்ளார்.