டீசலின் இறக்குமதி தீர்வையில் அதிகரிப்பு.

டீசல் லீட்டர் ஒன்றின் இறக்குமதி தீர்வை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையில் டீசலின் விற்பனை விலை அதிகரிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஓ.சி நிறுவனத்திற்கும் டீசலின் விலையை அதிகரிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐ.ஓ.சீ நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் சுபர் டீசலின் விலை மாத்திரம் 2 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.