டீசலுக்கான உற்பத்தி வரி அதிகரித்தமை குறித்து எரிசக்தி அமைச்சர் கவலை.

டீசலுக்கான உற்பத்தி வரியானது ரூ.10இனால் அதிகரிக்கப்பட்டமை குறித்த தீர்மானம் குறித்து நிதியமைச்சினால் எடுத்த முடிவு குறித்து தான் கவலையடைவதாக எரிசக்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முகம் கொடுக்கவேண்டிய தீர்மானங்கள் குறித்த எவ்வித தேடுதலுமின்றி இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டமையானது சாதாரணமன்று என மேற்கோள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி புதிய வரியாக டீசல் லீற்றர் ஒன்றுக்கு 13 ரூபாய் அறவிடப்படுமென நிதி அமைச்சின் அறிக்கையில் நேற்றையதினம்(26) குறிப்பிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.