எதிர்வரும் வாரங்களில் டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளை குறைக்க இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
கூட்டுத்தாபனத்தில் நேற்று(31) இடம்பெற்ற ஆய்வுக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பின்னர் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போதுள்ள எரிபொருட்களின் விலை கடந்த 2015ஆம் ஆண்டு புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் கடைசியாகக் குறைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.