இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, அதற்கு பாவிக்கும் T.56 உண்டைகள் 07, வாள் மற்றும் கேரளா கஞ்சா 56g உடன் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் தொன் டக்லஸ் பிரியந்த பெரேரா எனப்படும் ‘டீலா’ என பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் நேற்று(24) மாலை கைது செய்யப்பட்டதோடு, இன்று(25) ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
R.Rishma