இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 361 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் 140,325 நோயாளிகள் அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரவியல் தெரிவிக்கின்றது.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 28,684 நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 25,601 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 8230 பேரும் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.