பிரபல பாலிவுட் நடிகை ஷரத்தா கபூர் டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக அவரால் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் இரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஷரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
