திருகோணமலை, அரசாங்க வைத்தியசாலையில் உள்வாங்கப்பட்ட டெங்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2388 ஆகவும் மரணங்களின் எண்ணிக்கை 16ஆகவும் இருக்கையில் H1N1 வைரசினால் மேலதிக மரணங்கள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கி.முருகாணந்தன் அவர்கள் கூறுகையில்;
திருகோணமலை பாலையூற்று 58 வயதான பெண்ணின் மரணம் மற்றும் கேணியடி, கல்முனையை பிறப்பிடமாகவும் திருகோணமலை குச்சவெளி பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியின் மரணம் தொடர்பாகவும் மர்மங்கள் நீடிக்கின்றன.
இது H1N1 எனப்படும் வைரஸ் ஆக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது குறித்து பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இன்னும், இது குறித்த வைரஸ்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்குமாறும் சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.