டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை…

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்துமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள குருதி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த காலப்பகுதியில் 49,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டார்கள் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.