டெங்கு பரவும் இடங்களை பரிசோதனை செய்ய ‘ட்ரோன் கேமரா’ திட்டம்..

நாடளாவிய ரீஎதியில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள டெங்கு நோய் தாக்கத்திற்கு தீர்வினைப் பெரும் நோக்கில் முதன் முறையாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில், டெங்கு பரவும் இடங்களை பரிசோதனை செய்ய ட்ரோன் கேமரா (Drone Camera) உபயோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மாடி வீடுகளில் நீர் வடிந்தோட அமைக்கப்பட்டுள்ள “பீலி” களை சோதனை இடுதல், மாடி வீடுகளின் மேல் தட்டை (ஸ்லாப்) ஐ சோதனை இடுவதன் மூலம் அதில், நுளம்புகள் பரவக்கூடிய வகையான சூழல்கள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்டறிய முடியும் என சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருவளை சுகாதார வைத்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள தர்கா நகர், மருதானை உள்ளிட்ட பல பிரதேசங்களில் டெங்கு நோய் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(rizmira)