டெரென் லீமனும் ஆஸி அணியிலிருந்து கண்ணீருடன் அழுது விடை பெற்றார்… (VIDEO)

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் பந்தினை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி இருந்தது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டெரென் லீமன் தனது பதவி விலகலை அறிவித்தார்.

அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில்;

“..தென்னாபிரிக்க அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகவுள்ளேன்.

இவ்வாறு நடந்து கொண்டமைக்கு மன்னிப்புக் கோருகின்றேன்…” என கண்ணீருடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

குறித்த வீடியோ;