கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் புகையிரத மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் பனிமூட்டம் காரணமாக புகையிரத சேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்களை தவிர்க்கும் விதமாக 18 புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 புகையிரதங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றதாகவும், புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி வரும் ஏறக்குறைய அனைத்து புகையிரதங்களும் தாமதமாக இயக்கப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.