டெல்லியில் பனிமூட்டம்: 6 விமானங்கள், 21 ரயில்கள் ரத்து…

டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, இன்று(02) 6 விமானங்களும், 21 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக டெல்லியில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனி மூட்டம், போக்குவரத்து சேவையை வெகுவாக பாதித்துள்ளது. தினமும் ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும்(02) கடும் பனிமூட்டம் காரணமாக, இன்று(02) டெல்லிக்கு வரும் 64 ரயில்கள் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 24 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 20 விமானங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.