டெல்லி அணியினை பலப்படுத்த களத்தில் சாமுவேல்ஸ் இணைப்பு..

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மர்லன் சாமுவேல்ஸ் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்னாபிரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பே விலகி விட்டார்.

அவருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மர்லன் சாமுவேல்ஸ் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக நேற்று(27) தெரிவிக்கப்பட்டது.

36 வயதான சாமுவேல்ஸ் முதலில் ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் இடம் பிடித்து, அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத நிலையில், தற்போது வேறு வழியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சாமுவேல்ஸ் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் டெல்லி அணியுடன் நாளை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

(rizmira)