உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டெல்லி பரூக்காபாத் அரசு மருத்துவமனையிலும் ஒட்சிசன் பற்றாக்குறையால் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தைகள் உயிரிழப்புக்கு ஒட்சிசன் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் பற்றாக்குறையும் காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பரூக்காபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் ஒட்சிசன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.