டெஸ்ட் அணியின் உப தலைமை சுரங்க லக்மாலுக்கு…

பங்களாதேசுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் உப தலைவராக இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த இந்த நியமனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 31ம் திகதி பங்களாதேஷின் சிட்டாகோங் நகரில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma