டெஸ்ட் அணியில் கோஹ்லிக்கு இடமில்லை – கொந்தளித்த இந்திய ஊடகம்…

சர்வதேச கிர்க்கெட் பேரவையின் இந்த ஆண்டுக்கான டெஸ்ட் அணியில், இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி இணைத்துக் கொள்ளப்படாமை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பப்பியுள்ளது.

இந்த ஆண்டில் விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் 76 என்ற ஓட்ட சராசரியைக் கொண்டுள்ளார்

எனினும் 47 என்ற ஓட்ட சராசரியைக் கொண்ட நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் போன்றோரும் இந்த அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் மாத்திரமே இந்த ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கை சார்பில் சர்வதேச டெஸ்ட் அணிக்கு ரங்கன ஹேரத் மாத்திரமே தெரிவாகியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த ஆண்டுக்கான சர்வதேச ஒருநாள் அணிக்கு விராட் கோஹ்லியே தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.