டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான சீசன் டிக்கெட் – ஒருவருக்கு 2 மாத்திரமே..

இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதி நடைபெறும்.

இந்த போட்டிக்கான சீசன் டிக்கெட் விற்பனை நாளை(29) காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது. 5 நாள் ஆட்டத்திற்குரிய சீசன் டிக்கெட் ரூ.300, ரூ.500, ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் விலைகளில் கிடைக்கும். விலை உயர்ந்த டிக்கெட்டுகள் ஏ.சி. வசதி கொண்டது. சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் அனுமதிக்கப்படாது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும். www.bookmyshow.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம். தினசரி டிக்கெட், போட்டி நடைபெறும் நாட்களில் விற்கப்படும்.