டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு

ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் திகதி நிலவரப்படி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.3¼ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஊக்கத் தொகையாது அடுத்த ஆண்டு முதல் ஒரு மடங்கு உயர்த்தப்படுகிறது. இதற்கு ஐ.சி.சி. ஒப்புதல் வழங்கிவிட்டது. இதன்படி 2016-ம் ஆண்டு முதல், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணி ரூ.6½ கோடியை பரிசாக பெறும்.