தென் ஆப்ரிக்காவுக்கான சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பயிற்சி போட்டியில் தனது முதல் இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்று கொண்டது.
இதன்போது கௌசல் சில்வா 80 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 71 ஓட்டங்களையும், தனஞ்ச டி சில்வா மற்றும் குசல் மென்டிஸ் அரை சதங்களையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று(19) இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது தென் ஆப்பிரிக்கா அணி, தனது முதல் இனிங்சில் 8 விக்கட்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.