மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கெய்ல் அதிரடியில் மட்டுமல்ல, மற்றவர்களை கிண்டல் செய்வதிலும் கில்லாடியாக இருப்பவர்.
அவர் டிவிட்டரில் அனைவரையும் வம்பிழுப்பதையே பொழுது போக்காக வைத்துள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இதனால் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சில போட்டிகளில் அவரால் ஆட முடியவில்லை. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் டிவிட்டரில் அவரின் ரசிகை ஒருவர், ” கெய்ல் எனது இதயம் உனக்காக துடித்துக் கொண்டிருக்கிறது. நாம் டேட்டிங் போகலாமா?” என்று கேட்டுள்ளார்.
இதற்கு கிறிஸ் கெய்ல், ”நீ செலவு செய்வதாக இருந்தால் தாராளமாக போகலாம்” என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.


