மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆகியவற்றில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டேன் பியசாத் உட்பட8 சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மொறட்டுவை மாநகர மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவாக்கபுர பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, களனி பிரதேச சபையின் தலைவர் மஞ்சுள பிரசன்ன, டேன் பியசாத் உள்ளிட்டோர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் நேற்று குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இயற்கை உரத்தை பயன்படுத்தி தேசிய பாரம்பரிய நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க விவசாய காப்புறுதிச் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, விவசாயிகளுக்கு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – COVID-19 தொற்றுக்குள்ளனாவர்கள் விசேட மாற்றமொன்றை அனுபவிக்கின்றனர். சிலர் தடிமலைத் தவிர வேறு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லையென கேள்விப்படுகையில், மேலும்…
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது. திடீரென கடல்…