டொனால்ட் டிரம்ப் – கிம் ஜோங்-உன் நேரடிப் பேச்சுவார்த்தை:..

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு அடுத்த மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

டிரம்ப் – கிம் சந்திப்பு நடத்த பல்வேறு நகரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், ஜூன் 12-ம் திகதி சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்னை சந்திக்க உள்ளேன். உலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் சிறப்பு மிக்க தருணம் என டிரம்ப் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.