டொப் 10 முறைப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இறுதி முறைப்பாடு பிரதமருக்கு…

கூட்டு எதிர்க் கட்சியினரின் டொப் 10 முறைப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இறுதி முறைப்பாடு இன்று(16) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலைய கேள்வி அறிவித்தலின் போது 5,000 மில்லியன் ரூபாய் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக குறித்த இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் எதிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தா அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)