டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை..

அமெரிக்கா டொலரின் பெறுமதி அதிகரிப்பதனால் இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்குறித்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரூபாயினை பாதுகாப்பதற்காக டொலர் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக வெளிநாட்டு இருப்புக்கள் குறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் இறுதியில் டொலரின் பெறுமதி 131 ரூபாவாக காணப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுவரையில் இலங்கையில் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்புக்கள் இருந்ததாகவும், தற்போது அது வரையில் 6 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டினுள் பாரிய நிதி நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.