(FASTGOSSIP|COLOMBO) – இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ளமை குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இவை சரியான தருணத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
என்னை பொறுத்தவரை இரண்டு வருடங்களில் நல்ல முறையில் போட்டிகளின் தரம் உயர்ந்துள்ளது. தனித்தனியாக வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், நாங்கள் ஒரு அணியாக இணைந்து சிறப்பான முறையில் இதுவரையில் விளையாடவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருப்பதன் மூலம் துடுப்பெடுத்தாட்டம் சற்று சவாலாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்த போட்டிகளில் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். இதனால் துடுப்பெடுத்தாட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியா அணித் தலைவராக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனியின் சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவையாகவுள்ளது.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளைமறுதினம் ஆரம்பமாகிறது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி டோனியின் சாதனையை சமன் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றன.