ட்ரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது ஒரு “மாபெரும் வெற்றி” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய நீதிமன்றங்கள் இந்தப் பயணத்தடை தீர்மானம், குறித்த சட்டத்துக்கு உட்பட்டதல்லவென தெரிவித்து அனுமதியளிக்க மறுப்புத் தெரிவித்திருந்தன.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிப்பதாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இருப்புனும், குறித்த பயணத்தடை அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களினால் வெகுவாக விமர்சிக்கப்பட்டுள்ளதோடு, இந்தத் தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அந்த நாட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்பின் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.